தீபாவளி பண்டிகை காரணமாக அருப்புக்கோட்டை பஜார் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனால் அருப்புக்கோட்டை பஜார் பகுதியில் தீபாவளிக்காக பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதற்காக பஜார் பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை மாற்றம் செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று (23-10-2022) தீபாவளிக்காக பொருட்கள் வாங்கும் பொதுமக்களின் வசதிக்காக பஜார் வழியாக கமுதி, கோவில்பட்டி, திருச்சுழி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் நாடார் சிவன் கோவிலில் இருந்து எஸ்.பி.கே பள்ளி சாலை வழியாக போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment