
சிவகாசி நகர் காவல் நிலையத்திலிருந்து, கைதியின் பாதுகாப்பு பணிக்காக ஆய்வாளர் சுபக்குமார், காவலர்களை நியமித்தார். இதில் மருத்துவமனை பாதுகாப்பு பணிக்கு செல்லுமாறு காவலர் செல்லம்மாளுக்கு உத்தரவிடப்பட்டது. கொரோனா பாதிப்பு உள்ள கைதியின் பாதுகாப்பு பணிக்கு செல்ல முடியாது என அவர் கூறியதையடுத்து, ஆய்வாளர் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளார்.
தன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கூறிய காவலர் செல்லம்மாள், காவல் நிலையத்திற்கு வந்து ஆய்வாளர் சுபக்குமாரிடம் பேசியுள்ளார். அப்போது திடீரென்று செல்லம்மாள் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். உடனடியாக அங்கிருந்த சக காவலர்கள், செல்லம்மாள் முயற்சியை தடுத்து அவரை மீட்டனர். இது குறித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் விசாரணை நடத்தினர். பணியை சரிவர செய்யாமல், ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காவலர் செல்லம்மாளை, பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment