அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு டி.ஐ.ஜி பொன்னி தலைமை வகித்தார் மாவட்ட எஸ்.பி மனோகர் அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி கருண் கார்ட் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் அருப்புக்கோட்டை திருச்சுழி கமுதி உட்கோட்டங்களுக்கு உட்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தேவர் குருபூஜையை முன்னிட்டு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் சொந்த வாகனங்களில் செல்வோரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என போலீசாருக்கு டி.ஐ.ஜி பொன்னி அறிவுறுத்தினார். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். இதில் போலீசார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment