சாலைகளில் வாகனங்களை ஓட்டிச் செல்வோர் அவசரகால வாகனங்களான ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனத்திற்கு வழி விட்டு செல்ல வேண்டும். இதனை மீறி அவசரகால வாகனங்களான ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனத்திற்கு வழி விடாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூ 10,000 அபராதம் விதிக்கப்படும் என விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஒரு உயிரை காப்பாற்ற ஒரு நொடி காத்திருந்து செல்லுங்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

No comments:
Post a Comment