அருப்புக்கோட்டை தெற்கு மகாராஜபுரம் தெரு மற்றும் காந்தி மைதானத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நகர்ப்புற மக்களுக்கான ஊட்டச்சத்து நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவர் கோமதி தலைமை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment