அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று(26-10-2022) இந்த அரசு மதுபானக்கடையில் மது அருந்திய இளைஞர் ஒருவர் மதுபோதையில் நிற்கமுடியாமல் தவறி அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் விழுந்தார். போதையின் உச்சத்தில் செய்வதறியாது கால்வாயிலேயே போதையில் மயங்கினார்.

நீண்ட நேரத்திற்கு பின் அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு தண்ணீரை ஊற்றி அனுப்பி வைத்தனர். இந்த மதுபானக்கடையின் அருகே கோவில் மற்றும் தனியார் மருத்துவமனையும் தனியார் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பாதை என்பதாலும் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாலும் இந்த மதுபானக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment