அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் பேருந்து நுழையும் பகுதியில் உள்ள வாறுகால் சேதமடைந்து ஒரு வார காலமாக துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கழிவுநீர் அனைத்தும் வீதிகளில் சென்று சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது, எனவே சேதமடைந்து கிடக்கும் வாறுகாலை சரிசெய்து நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நகராட்சி சுகாதார அலுவலகம் பழைய பேருந்து நிலையத்தின் உள்ளே இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment