அருப்புக்கோட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ் ராஜா அம்மன் கோவில் தெருவில் உள்ள தனது மாமனார் வீட்டில் மனைவியுடன் தினேஷ் ராஜா குடியிருந்து வந்தார். இந்நிலையில் தனது மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த பத்து நாட்களாக தினேஷ் ராஜா கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள தனது அக்கா வீட்டில் இருந்து வந்துள்ளார்.
கடந்த 24ம் தேதி அம்மன் கோவில் தெருவில் உள்ள தனது மனைவியை பார்க்க சென்ற போது தினேஷ் ராஜாவின் மாமனார் கருப்பசாமியும் மைத்துனர் ரவிச்சந்திரனும் சேர்ந்து பாட்டிலால் தினேஷ் ராஜாவை தாக்கியுள்ளனர். இது குறித்து தினேஷ் ராஜா அளித்த புகாரின்பேரில் நகர் காவல் நிலைய போலீசார் நேற்று (25-10-2022) வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment