புறக்காவல் நிலையத்தை திறப்பது எப்போது? - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 28 October 2022

புறக்காவல் நிலையத்தை திறப்பது எப்போது?

அருப்புக்கோட்டை நகரில் வழிப்பறி திருட்டு கடத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக நகரின் நான்கு எல்லைகளிலும் நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் முயற்சியில் புறக்காவல் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி புளியம்பட்டி விருதுநகர் சாலையில் புறக்காவல் நிலையம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த பணிகள் முடிவடைந்து விட்டது. 

இதன் மூலம் விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் சாத்தூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய முடியும் மேலும் இங்கு அதிநவீன கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதால் வழிப்பறி செயின் பறிப்பு கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் பெருமளவில் குறையும் என போலீசார் தெரிவிக்கின்றனர். எனினும் பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் புறக்காவல் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை புறக்காவல் நிலையம் திறப்பு எப்போது என பொதுமக்கள் காத்திருக்கின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad