விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா செம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் அலெக்ஸ் பாண்டியன் செம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு முடித்துள்ளார். பெற்றோர் இருவரும் மில்லில் வேலைப்பார்க்கும் கூலித் தொழிலாளர்கள் இந்நிலையில் மாணவர் அலெக்ஸ் பாண்டியன் இந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்று தேனி மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்க (MBBS) இடம் கிடைக்கப்பெற்றுள்ளார். கிராமத்தில் இருந்து மருத்துவம் படிக்க தேர்வான மாணவர் அலெக்ஸ் பாண்டியனுக்கு கிராம மக்கள் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

No comments:
Post a Comment