அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன காப்பகம் துவங்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று தென்னக ரயில்வேயால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன காப்பகம் ரயில் நிலையத்தின் வாயில் அருகிலேயே உள்ளதால் பயன்படுத்த எளிதாகவே உள்ளது இந்நிலையில் இங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கான கட்டண விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பதாகை காப்பகத்தின் வெளியே ஒட்டப்பட்டுள்ளது.

அதில் சைக்கிள், இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் என ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்தனியாக கட்டண விவரங்கள் குறிக்கப்பட்டுள்ளது. இது ரயில் பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment