அருப்புக்கோட்டை அருகே கொப்புச்சித்தம்பட்டியை சேர்ந்தவர் அழகம்மாள்(32) கணவரை இழந்தவர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வடிவேல் முருகன் என்பவர் தனது வான்கோழியை காணவில்லை என்றும் அந்த வான்கோழியை அழகம்மாளின் மகன் திருடியதாகவும் கூறி வீடு புகுந்து ரூபாய் 5,000 பணம் கேட்டு மிரட்டியதாகவும் மேலும் அரிவாளை காட்டி கொலை செய்து விடுவேன் என மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அழகம்மாள் அளித்த புகாரின் பேரில் பந்தல்குடி போலீசார் வடிவேல் முருகன் மீது நேற்று (11-10-2022) வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment