அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் பாபு இந்நிலையில் கார்த்திக் பாபு தனது மனைவி திவ்யபாரதி உடன் இருசக்கர வாகனத்தில் சொந்த வேலையாக காந்தி நகர் நோக்கி சென்று கொண்டு இருந்தார் அப்போது புறவழிச்சாலை சாய்பாபா கோவில் அருகே எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி கார்த்திக் பாபு மற்றும் அவருடைய மனைவி திவ்யபாரதி இருவரும் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து கார்த்திக் பாபு தந்தை அசோகன் புகாரின் பேரில் விபத்து ஏற்படுத்தியதாக பாலாஜி என்பவர் மீது நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
No comments:
Post a Comment