இவ்விழாவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணைந்து புதிய பயிர் ரகங்கள் மேலும் பல தொழில்நுட்பங்கள் ஆகியவை காட்சிபடுத்தப்பட உள்ளன. இந்த விழாவில் பண்ணை கருவிகள் மற்றும் சாகுபடி தொழில் நுட்பம் செயல் விளக்கத்தோடு செய்து காண்பிக்கப்பட உள்ளது.
மேலும் சிறந்த உழவர்களை கெளரவிக்கும் விதமாக அவர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்வினை பெருவாரியான விவசாயிகள் கண்டு மகிழ்ந்து இதில் உள்ள பல்வேறு தொழில் நுட்பங்களை அறிந்து பயன்பெற வேண்டும் என்பதற்காக அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில் விருதுநகர் மாவட்ட விவசாயிகள் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற உள்ள உழவர் தின விழா கொண்டாட்டங்களுக்கு அழைத்து செல்லப்பட இருக்கின்றனர்.
இவ்விழாவில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள விவசாயிகள் கோவிலாங்குலத்தில் உள்ள விருதுநகர் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா பாபு தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 8098688973, 9994936568 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment