அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நகர் மண்டல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு இராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் ஆத்மா கார்த்திக் தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் நகர் பகுதிகளில் இதுவரை நடைபெற்று வந்த கட்சி பணிகள் குறித்தும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்தில் நகர் மண்டல் தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment