திருவில்லிபுத்தூர் குளம் சீரமைப்பு பணியில் இருந்த டிராக்டர் வாகனம் திருட்டு. பாஜக நிர்வாகி கைது. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 9 October 2022

திருவில்லிபுத்தூர் குளம் சீரமைப்பு பணியில் இருந்த டிராக்டர் வாகனம் திருட்டு. பாஜக நிர்வாகி கைது.


விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில், திருப்பாற்கடல் குளம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியை ராஜபாளையத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் செய்து வருகிறார். இரவு பணிகள் முடிந்த பின்பு டிராக்டர் வாகன ஓட்டுனர் கணேசன், டிராக்டரை குளக்கரையில் நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டார். மறுநாள் காலை திரும்பி வந்த கணேசன், குளக்கரையில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் வாகனம் காணாமல் போனதைக்கண்டு திடுக்கிட்டார். 


இது குறித்து கணேசன், திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். போலீசாரின் விசாரணையில், கடம்பங்குளம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மற்றும் கருப்பசாமி இருவரும் சேர்ந்து டிராக்டர் வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள கண்ணன் என்பவர், பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். 

No comments:

Post a Comment

Post Top Ad