நூல் ஆலையில் தீ பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு பொதிகள் மற்றும் நூல் தயாரிக்கும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமாகின. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 9 October 2022

நூல் ஆலையில் தீ பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு பொதிகள் மற்றும் நூல் தயாரிக்கும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமாகின.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள கம்மாபட்டி பகுதியில், ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர், நந்தா என்பவர்களுக்கு சொந்தமான கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் ஆலை உள்ளது. 


ஆலையில், திடீரென்று மின்சாரம் நின்று சிறிது நேரம் கழித்து மீண்டும்  வந்த போது, அதிக மின்னழுத்தம் காரணமாக பஞ்சிலிருந்து நூல் தயாரிக்கும் இயந்திரத்தில் தீப்பொறி ஏற்பட்டு, பஞ்சு பொதிகள் தீப்பிடித்து எரியத் துவங்கின.


அங்கிருந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். 


இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு பொதிகள் மற்றும் நூல் தயாரிக்கும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமாகின. விபத்து குறித்து ராஜபாளையம் வடக்கு  போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad