அருப்புக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ செளண்டம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் நவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில் விழாவின் இறுதி நிகழ்ச்சியான அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோவிலில் இருந்து துவங்கிய பூப்பல்லக்கு வீதி உலா திருச்சுழி ரோடு, பூக்கடை பஜார், டெலிபோன் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலில் நிறைவுற்றது. வீதி உலாவாக சென்ற அம்மனை வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
No comments:
Post a Comment