இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் ராஜதுரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தற்கொலைக்கு முயன்றதாக ஜஸ்வர்யா மீது டவுன் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி ராமலிங்கா ஆர்ச் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை (33) இவரது மனைவி ஜஸ்வர்யா (29) இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளனர். தம்பதியருக்கு இடையே அடிக்கடி சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜஸ்வர்யா திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
No comments:
Post a Comment