அருப்புக்கோட்டையில் கூலி வேலை செய்து வரும் தம்பதியரின் 17வயது மகள் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமியிடம் போடம்பட்டியை சேர்ந்த 19வயது இளைஞர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இளைஞர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment