அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியில் புறநகர் பேருந்து நிறுத்தம் அருகே திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பைகளால் கடும் சுகாதார கேடு ஏற்பட்டது. மேலும் குப்பைகள் காற்றில் பறந்து இருசக்கர வாகன ஓட்டிகளின் மேல் விழுந்தது. இந்த குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த செய்தி நமது தமிழக குரல் இணையதளத்தில் வெளியானது. இந்நிலையில் இன்று (22-10-2022) செய்தி எதிரொலியாக தற்போது நகராட்சி அதிகாரிகள் தூய்மை பணியாளர்கள் மூலம் அங்கு தேங்கியிருந்த குப்பைகளை அகற்றியுள்ளனர்.
No comments:
Post a Comment