அதன்படி உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்கவும் வாங்கவும் வேண்டும் என்றும் மற்றும் காலையில் 6மணி முதல் 7மணி வரையும் மாலையில் 7மணி முதல் 8மணி வரையும் என இரண்டு மணிநேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் பெட்ரோல் பங்க் உள்ள இடங்கள் மற்றும் எளிதில் தீபற்றக்கூடிய பொருட்கள் உள்ள இடங்களில் பட்டாசு வெடிக்க கூடாது பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்கக்கூடாது.
மேலும் மருத்துவமனைகள் வழிபாட்டுத்தலங்கள் நீதிமன்றங்கள் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி கிடையாது. பட்டாசுகள் வெடிக்க நீளமான ஊதுபத்தி பயன்படுத்த வேண்டும். பட்டாசுகள் மூலம் விபத்துகள் ஏற்பட்டால் உடனடியாக 100, 112 மற்றும் 108ஐ தொடர்பு கொள்ள வேண்டும் என விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment