பண்ணைக் கழிவுகளை தீயிட்டு கொளுத்துவதால் ஏற்படும் காற்று மாசுபாடு மற்றும் நிலத்தின் வளத்தன்மை பாதிக்கப்படுவதை தடுக்க பண்ணைக் கழிவுகளில் இயற்கை உரம் தயாரித்தல் பற்றிய பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியின் போது வேஸ்ட் டிகம்போசர் என சொல்லப்படும் பண்ணைக் கழிவுகளை விரைவில் மக்க செய்யும் நுண்ணுயிரிகளின் கலவை கொண்டு எப்படி இயற்கை உரம் தயாரித்தல் என்ற விளக்க உரை முனைவர் விஜயகுமார் அவர்களால் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் மக்கும் குப்பை மக்காத குப்பையை தனியாக பிரித்து மக்கும் குப்பையையும் இந்த வேஸ்ட் டிகம்போசர் மூலம் மக்க செய்யும் நுண்ணுயிரி கலவை கொண்டு எப்படி இயற்கை உரம் தயாரித்தல் என்ற விளக்கமும் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் கிட்டத்தட்ட 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா பாபு செய்திருந்தார்.
No comments:
Post a Comment