விருதுநகர் சாலையில் உள்ள இந்த கண்மாய்க்கு காடுகளில் பெய்யும் மழையின் மூலம் நீர் வருகிறது. இந்த கண்மாய் நிறைந்தால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் ஆனால் மோதிய மழை பெய்யாததால் கண்மாய் வற்றி காணப்பட்டது.
காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு மாடுகள் மேய்ச்சலை முடித்துவிட்டு இந்த கண்மாயில் நீர் அருந்துவது வழக்கம் மழை இல்லாமல் கண்மாய் வறண்டு காணப்பட்டதால் மேய்ச்சலுக்கு ஆடு மாடுகளை ஓட்டிசெல்பவர்கள் கால்நடைகளுக்காக நீரை தேடி அலையும் சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் அருப்புக்கோட்டையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையில் புளியம்பட்டி கண்மாய் நிறைந்து காணப்படுகிறது இதனால் அப்பகுதி மக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment