சிவகாசி அருகே ரேசன் அரிசி மூடைகள் கடத்தல். 120 அரிசி மூடைகள் கைப்பற்றப்பட்டது. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 22 October 2022

சிவகாசி அருகே ரேசன் அரிசி மூடைகள் கடத்தல். 120 அரிசி மூடைகள் கைப்பற்றப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள நாகலாபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையிலிருந்து, அரிசி மூடைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று நள்ளிரவு, தனிப்படை சார்பு ஆய்வாளர் சுந்தர்ராஜ் தலைமையில், போலீசார் நாகலாபுரம் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது சங்கரன்கோவில் அருகேயுள்ள ஊமைத்தலைவன்பட்டி பகுதியைச் சேர்ந்த சீனிப்பாண்டி (47) மற்றும் சிலர் ஒரு லோடு வேனில், ரேசன் அரிசி மூடைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீசார் வருவதையறிந்த அந்த கும்பல், அங்கிருந்த காரில் ஏறி தப்பியது. ரேசன் அரிசி மூடைகளை ஏற்றிக் கொண்டிருந்த லோடு வேனில் இருந்த வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த குமார் (35), திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் (30), ஊமைத்தலைவன்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்தனமாரி (20) ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து, 120 மூடை ரேசன் அரிசியை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். 


மேலும் கடத்தல்காரர்கள் பயன்படுத்திய கார் மற்றும் வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசி மூடைகள் கடத்தலில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad