தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தற்போதே தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது. இந்நிலையில் அருப்புக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர்கள் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.
மருத்துவர் கோமதி தலைமையில் செவிலியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு பட்டாசுகள் வெடித்து தீபாவளியை கொண்டாடினர். இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment