ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியர் கொலை வழக்கு; எதிர் வீட்டு தம்பதி கைது. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 18 October 2022

ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியர் கொலை வழக்கு; எதிர் வீட்டு தம்பதி கைது.

அருப்புக்கோட்டை எம்.டி.ஆர் நகர் வடக்கு 2வது தெருவை சேர்ந்தவர் சங்கரபாண்டியன் இவருடைய மனைவி ஜோதிமணி ஓய்வுபெற்ற ஆசிரியர்களான சங்கரபாண்டியன் ஜோதிமணியின் மகன் சதீஷ் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். தம்பதியர் இருவரும் தனியே வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூலை 18ம் தேதி சங்கரபாண்டியன் ஜோதிமணி தம்பதியரை மர்ம நபர்கள் கொலை செய்து நகை பணத்தை திருடிச் சென்றனர்.


இந்த தனிப்படை போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது கொலைச் சம்பவத்திற்கு முன்பாகவும் கொலைச் சம்பவத்திற்கு பின்னரும் அப்பகுதியில் சந்தேகப்படும்படியான வகையில் சென்றவர்கள் குறித்து சிசிடிவி கேமராவில் ஆராய்ந்ததில் ஜோதிபுரம் 7வது தெருவில் வசிக்கும் மில் தொழிலாளி சங்கர்(42) என்பவர் அப்பகுதியில் அடிக்கடி சென்று வந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சங்கரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 


சங்கர் தனது மனைவி பொன்மணியுடன்  கொலை செய்யப்பட்ட சங்கரபாண்டியன் வீட்டிற்கு எதிரே சில மாதங்களுக்கு முன் குடியிருந்துள்ளார். சங்கரின் மனைவி பொன்மணி சங்கரபாண்டியன் ஜோதிமணி தம்பதியருடன் நட்பாக பழகி வந்துள்ளார். சங்கர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த நிலையில் தனது மனைவி மூலம் சங்கரபாண்டியனிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் சங்கரபாண்டி பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கர் சங்கரபாண்டியன் - ஜோதிமணி தம்பதியை கொலை செய்து நகை பணத்தை திருட தனது மனைவி பொன்மணியுடன் இணைந்து திட்டம் தீட்டியுள்ளார் . இதற்காக சம்பவம் நடந்த அன்று சங்கர் சங்கரபாண்டியன் வீட்டில் அதிகாலை வரை பாத்ரூமில் மறைந்திருந்தார் பின்னர் ஜோதிமணி அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட வந்த போது உள்ளே நுழைந்த சங்கர் தூங்கி கொண்டிருந்த சங்கரபாண்டியனை கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார். 


சங்கர பாண்டியன் சத்தம் கேட்டு ஜோதிமணி உள்ளே சென்றுள்ளார். அப்போது கதவின் பின்னால் மறைந்திருந்த சங்கர் ஜோதிமணியையும் கத்தியால் குத்திக் கொலை செய்து அவர் அணிந்திருந்த தங்க நகைகளை எடுத்துக்கொண்டு தனது மனைவி பொன்மணி உதவியுடன் அங்கிருந்து தப்பியுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து சங்கரையும் அவரது மனைவி பொன்மணியையும் போலீசார் கைது செய்தனர்.  மேலும் அவர்களிடம் இருந்து 10 சவரன் தங்க நகைகளையும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நகை பணத்திற்காக கணவன் மனைவியை கூட பழகியவர்களே கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad