அருப்புக்கோட்டை எஸ்.பி.கே கலை மற்றும் அறிவியல்கல்லூரியில் நேற்று (18-10-2022) ரத்ததான முகாம் நடைபெற்றது. அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் ரத்த இருப்பை அதிகப்படுத்தும் நோக்கில் இந்த ரத்ததான முகாமை கல்லுாரியில் இயங்கி வரும் யூத் ரெட் கிராஸ் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் அந்த கல்லூரியில் பயிலும் சுமார் 250 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் ரத்ததானம் வழங்கினர். இந்த முகாமில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment