அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே கடும் வெயில் சுட்டெரித்து வந்தது இந்நிலையில் மாலை வேளையில் தீடிரென கருமேகங்கள் சூழ்ந்து புளியம்பட்டி, வேலாயுதபுரம், கோபாலபுரம், மதுரை ரோடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1மணி நேரம் கன மழை பெய்தது. கன மழை காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீரோடு சாக்கடை நீரும் கலந்து தேங்கியது கன மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment