அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி, பாளையம்பட்டி, பந்தல்குடி, வேலாயுதபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளை (15-10-2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பெரிய புளியம்பட்டி, திருநகரம், விருதுநகர் ரோடு புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், வெள்ளைக்கோட்டை, சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட நகர் பகுதிகளிலும் பாளையம்பட்டி, பந்தல்குடி, வேலாயுதபுரம், உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ் இலக்கிய திறனறி தேர்வு நாளை நடைபெற உள்ளதால் நகர் பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்படுவதாக மின்வாரிய செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார். ஆனால் ஒன்றிய பகுதிகளில் வழக்கம் போல் நாளை மின்தடை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment