சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மாவட்ட எஸ்.பி அறிவுரை. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 14 October 2022

சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மாவட்ட எஸ்.பி அறிவுரை.

சைபர் குற்றங்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு.மனோகர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு கீழ் காணும் அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

  1. OTP மற்றும் வங்கி தொடர்பான விபரங்களை யாருக்கும் கொடுக்கக்கூடாது.
  2. தங்களது மொபைல் எண்ணிற்கு உங்களது வங்கி கணக்கு பிளாக் செய்யப்பட்டுள்ளது என்று வரும் தேவையற்ற லிங்கை தொட்டு உள்நுழைய வேண்டாம்.
  3. உடனடியாக கடன் வழங்கும் செயலிகளில் கடன் பெற வேண்டாம்.
  4. கவர்ச்சியான விளம்பரங்களை நம்பி போலியான (online purchase app) களில் பொருள் வாங்க பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
  5. உங்கள் நிலத்தில் மாத வாடகைக்கு மொபைல் டவர் அமைப்பதன் மூலம் அதிக தொகை கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறும் நபர்களிடம் முன்பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
  6. ஆன்லைனில் வேலைவாய்ப்பு/ பகுதிநேர வேலை வாய்ப்பு வழங்குவதாக சொல்லும் நபர்களிடம் முன்பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
  7. தங்களுக்கு அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து வரும் வீடியோ அழைப்புக்கு பதில் அளிக்க வேண்டாம் உங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்ட கூடும்.

அனைத்து வகையான சைபர் குற்றங்கள் சம்பந்தப்பட்ட புகார் தெரிவிக்க 1930 இலவச எண் மற்றும் cybercrime.gov.in பயன்படுத்தவும் என அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad