அருப்புக்கோட்டை அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம் இவரது மகளுக்கும் பாளையம்பட்டியை சேர்ந்தவருக்கும் கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. தம்பதியரிடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களது விவாகரத்து வழக்கு அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராஜாராம் அவரது மகள் மற்றும் மனைவி புகைப்படத்தை வைத்து அவதூறு வாசகங்களுடன் சில மர்ம நபர்கள் எம்.டி.ஆர்.நகர் உள்ளிட்ட இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர். இது குறித்து நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment