அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் தெற்கு பட்டியை சேர்ந்தவர் நாகபெருமாள் இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பிரபு என்பவர் தனது இடத்தை கிரையம் செய்து தருவதாக நாகபெருமாளிடம் ரூ 4,76,000 பணத்தை பெற்றுக் கொண்டு இடத்தை கிரையம் செய்து தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பணத்தை திருப்பி கேட்டபோது நாகபெருமாளுக்கு பிரபு அவரது சித்தி பழனியம்மாள் மற்றும் ரேவதி உள்ளிட்ட 30 பேர் நாகபெருமாள் வீட்டிற்குள் நுழைந்து அரிவாள் கம்புகளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நாகபெருமாள் புகாரின் பேரில் தாலுகா போலீசார் 30 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment