தீபாவளி நெருங்கி வரும் நிலையில் பாதுகாப்பான தீபாவளி குறித்து தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அருப்புக்கோட்டை பஜார் பகுதியில் தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜ் தலைமையிலான தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
பஜாரில் உள்ள கடைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு மற்றும் பேருந்து நிறுத்தத்தில் இருப்போருக்கும் தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடவேண்டும் என கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
No comments:
Post a Comment