போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்க முயற்சி. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 13 October 2022

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்க முயற்சி.

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியை சேர்ந்தவர் திருமால் தனலிங்கம் இவரது வீட்டிற்கு எதிரே இடிந்த வீடோடு கூடிய காலிமனை உள்ளது. இந்நிலையில் இந்த இடம் தன்னுடையது என்றும் இந்த இடத்தை விற்க வேண்டும் எனவும் விருதுநகர் சீதக்காதி தெருவைச் சேர்ந்த ரவிசங்கர் என்பவர் திருமால் தனலிங்கத்தை அணுகியுள்ளார். 


வீட்டிற்கு எதிரே இடம் இருப்பதால் அதை வாங்கிக் கொள்வதாக கூறி திருமால் தனலிங்கம் அந்த இடத்திற்கான ஆவணங்களை ரவிசங்கரிடம் கேட்டுள்ளார். அதற்கு அட்வான்ஸ் கொடுங்கள் ஆவணங்களை தருகிறேன் பின்னர் பத்திரம் பதிந்து கொள்ளலாம் என ரவிசங்கர் கூறியதை கேட்டு திருமால் தனலிங்கம் கடந்த (18-3-2022) அன்று ரூ. 10,500 முன்பணமாக கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி ஆவணங்களை தராமல் ஏதாவது காரணம் கூறி ரவிசங்கர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். 


இதனால் சந்தேகம் அடைந்த திருமால் தனலிங்கம் வழக்கறிஞர் மூலம் மேற்படி சொத்து ஆவணங்களை வாங்கி ஆராய்ந்து பார்த்ததில் திருமால் தனலிங்கத்திடம் அட்வான்ஸ் தொகை பெற்ற மறுநாள் தான் ரவிசங்கர் தனது தந்தையிடம் தானசெட்டில் மெண்டாக அந்த இடத்தை பெற்றதும் மேலும் அந்த ஆவணங்களில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் சார்பதிவாளர் அலுவலகத்தில் தானசெட்டில் மெண்டுக்காக  கொடுக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் போலியாக இருப்பதை கண்டு திருமால் தனலிங்கம் அதிர்ச்சி அடைந்தார். 


இதனால் தன்னை ஏமாற்றும் நோக்கில் போலியான ஆவணங்களை தயார் செய்து ரூ 10,500 அட்வான்ஸ் தொகை பெற்று ஏமாற்றிய ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருமால் தனலிங்கம் அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


இந்நிலையில் நீதிபதி முத்து இசக்கி ரவிசங்கர் அவரது மனைவி உமாராணி அவர் மகன் ஸ்ரீதரன் மற்றும் பத்திர எழுத்தர் பாக்கியலட்சுமி, பத்திர பதிவாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யுமாறும் போலியாக உருவாக்கப்பட்ட ஆவணங்கள் குறித்தும் விசாரணை மேற்க் கொள்ளுமாறு அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் டவுன் போலீசார் நேற்று (12-10-2022) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad