அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் வேளாண்மை ஆராயச்சி மையத்தின் சார்பாக அருப்புக்கோட்டை, விருதுநகர், திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி, போன்ற ஊர்களை சேர்ந்த பல்வேறு விவசாய சங்க உறுப்பினர்கள், உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சுரபி""விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பாக முதன்முறையாக அமைக்கப்பட் அரசகுளம் மகளிர் விவசாய மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் உழவர் தின விழாவில் பங்கேற்றனர்.
விழாவில், தமிழக அரசு வேளாண்மை துறை சார்பாக அமைக்கப்பட்ட பல்வேறு கண்காட்சி அரங்குகளை பெண்கள் பார்வையிட்டனர். காய்கறி உற்பத்தி,. பழங்கள் பயிர் சாகுபடி, புதிய தொழில்நுட்ப இயந்திரங்களின் பயன்பாடுகள் பற்றி தெரிந்துகொண்டனர் . மேலும் கண்காட்சியில் பல்வேறு விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்களின் உற்பத்தி பொருட்கள், நிறுவன செயல்பாடுகள், சிறுதானியங்களில் தயார் செய்யப்படும் உணவு பொருட்களின் வகைகளை பார்வையிட்டனர்.
உழவர் தின விழாவில், பங்கேற்ற பெண்களுக்கு தோட்டப்பயிர்களுக்கான விதைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை , "சுரபி. நிறுவனர் விக்டர் மற்றும். வேளாண் ஆராய்ச்சி நிறுவன அலுவலர்கள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment