மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம், சாஸ்தா கோவில் அணை முற்றிலும் நிரம்பியது. 36 அடி உயரமுள்ள சாஸ்தா அணை நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. சாஸ்தா அணையின் மூலமாக சேத்தூர், தேவதானம், செட்டியார்பட்டி, சொக்கநாதன் புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 3 ஆயிரத்து, 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். சாஸ்தா அணை முழுவதும் நிரம்பி இருப்பதாலும், இந்தப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் ராஜபாளையம் அருகேயுள்ள விவசாய நிலங்களில், விவசாயப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததால் இந்தப்பகுதியில் விவசாயம் செழிப்பாக இருந்தது. இந்த ஆண்டும் தொடர் மழை பெய்து வருவதால், கடந்தாண்டை போலவே இந்தாண்டும் விவசாயம் செழிப்பாக இருக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கையுடன் கூறினர்.
No comments:
Post a Comment