எம்.ஜி.ஆருக்கு பின்பு புரட்சி தலைவி அம்மா அவர்கள் பல்வேறு நலத் திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கி தமிழகத்தை தலை நிமிரச்செய்தார். அதிமுக கட்சியின் வெற்றியை, பொய்யான வாக்குறுதிகள் வழங்கி திமுக கட்சி தட்டிப்பறித்துள்ளது. திமுக ஆட்சி செய்யும் காலங்களில் எல்லாம் வன்முறை வெடிப்பது இப்போதும் தொடர்கிறது. தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாடமுடியாத நிலை திமுக ஆட்சியில் தொடர் கதையாக உள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் மக்களுக்கான எந்த நல்ல திட்டங்களையும் செய்யவில்லை. மேலும் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு என மக்களை வாட்டி வதைத்து வருகிறது. திமுக கட்சிக்கு வாக்களித்த பொதுமக்கள், திமுக கட்சிக்கு வாக்களித்ததை எண்ணி எண்ணி வருத்தப்படுகின்றனர். சாமானிய மக்களின் துயரங்களை புரிந்து கொள்ளாத அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு நிறுத்திவிட்டது.
தமிழக அரசு டாஸ்மாக் வருமானத்தை மட்டுமே, இலக்கு நிர்ணயித்து வேகமாக செய்து வருகிறது. தொழில்துறைகள் முடங்கிப் போய் கிடக்கின்றன. மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். மக்களின் நிலையை தற்போதைய திமுக அரசு கவனிக்கத் தவறினால், வரும் மக்களவை தேர்தலில் திமுக படுதோல்வி அடையும். மக்கள் திமுக கட்சிக்கு சரியான பாடத்தை பரிசாக தருவார்கள். அதிமுக கட்சியை யாராலும் அசைக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது.
ஏனென்றால் இது தொண்டர்களால் உருவான பேரியக்கம் என்று ராஜேந்திரபாலாஜி பேசினார். கூட்டத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment