விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 18 October 2022

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம்.


அருப்புக்கோட்டை எம்.டி.ஆர் நகரில் உள்ள வீட்டில் கடந்த மாதம் 9ம் தேதி இளைஞர் ஒருவர் நுழைய முயன்றதாக கூறி அப்பகுதி மக்கள் அந்த இளைஞரை கொள்ளையன் என நினைத்து நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் விசாரணையில் அவர் செம்பட்டியைச் சேர்ந்த தங்கப்பாண்டி(33) என்பது தெரியவந்தது. 

மேலும் அவர் சற்று வித்தியாசமான முறையில் நடந்து கொண்டதால் போலீசாரின் அறிவுறுத்தலின்படி அவரது குடும்பத்தினர் தங்கப்பாண்டியை இராமானுஜபுரத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்த்தனர். பின்னர் எம்.டி.ஆர் நகர் மக்கள் தாங்கள் பிடித்து கொடுத்த நபரை போலீசார் வெளியே விட்டுவிட்டதாக கூறி சேர்மன் வீட்டை முற்றைகையிட முயன்றனர். இதனால் நகர் காவல் நிலைய போலீசார் தங்கப்பாண்டியை மீண்டும் காப்பகத்திலிருந்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். 


ஆனால் அப்போதும் அவர் வித்தியாசமான முறையில் நடந்து கொண்டதால் மீண்டும் அவரை காப்பகத்தில் சேர்த்தனர். இதனையடுத்து மறுநாள் அதிகாலை தங்கப்பாண்டி உடல் நல குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து தங்கப்பாண்டி  உறவினர்கள் போலீசார் விசாரணையில் தங்கப்பாண்டி இறந்துவிட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணையில் இராமானுஜபுரத்தில் உள்ள காப்பகத்தில் பணிபுரியும் சிவகாசியைச் சேர்ந்த வினோத் குமார், கல்குறிச்சியைச் சேர்ந்த ராஜேந்திர குமார் மற்றும் சுப்பிரமணி என்ற மூன்று இளைஞர்கள் தங்கப்பாண்டியை அடித்து கொடுமைப்படுத்தியது சிசிடிவி கேமரா காட்சிகளால் தெரியவந்தது. இதனையடுத்து இந்த மூன்று இளைஞர்களையும் சிபிசிஐடி போலீசார் நேற்று (17-10-2022) கைது செய்து சிறையில் அடைத்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad