அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(66) இவர் பந்தல்குடியில் லேத் பட்டறை நடத்தி வருகிறார். தினமும் இரவு லேத் பட்டறையில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நவநீதகிருஷ்ணன் லேத் பட்டறையில் தூங்கிக்கொண்டிருந்த போது லேத் பட்டறையின் ஷட்டரை திறந்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி நவநீதகிருஷ்ணனின் செல்போன் ரூபாய் 1500 பணம் மற்றும் அங்கிருந்த கட்டிங் மெஷினை திருடிக்கொண்டு தப்பியோடினர்.
இந்த சம்பவம் குறித்து நவநீதகிருஷ்ணன் புகாரின்பேரில் பந்தல்குடி போலீசார் நேற்று (17-10-2022) வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment