அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளத்தை சேர்ந்தவர் தங்கபாண்டி இவர் நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்தில் சாலையோரம் செடி நட்டு பராமரிக்கும் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று (17-10-2022) தங்கபாண்டி பந்தல்குடி புறவழிச்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் தங்கபாண்டியின் கழுத்தில் கத்தியை வைத்து அவரிடமிருந்த செல்போனை வழிப்பறி செய்து தப்பியோடினர்.
இந்த சம்பவம் குறித்து தங்கபாண்டி புகாரின்பேரில் பந்தல்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment