மேலும் மழை காலங்களில் நீர் நிலைகளில் ஆபத்தான வகைகளில் விளையாட வேண்டாம் என்று அந்தப்பகுதி மக்களிடம் வலியுறுத்தி கூறினர். நீர் நிலைகளில் யாரேனும் சிக்கிக் கொண்டால், உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து ஆபத்தில் சிக்கியிருப்பவர்களை பத்திரமாக மீட்பார்கள் என்று கூறினர். தொடர்ந்து சிவகாசியின் பல்வேறு பகுதிகளிலும் மீட்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டத்தில், பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மதுரை மாவட்டம் மட்டுமில்லாமல், திண்டுக்கல் மாவட்டத்தில், நிலக்கோட்டை, முருகதூரன்பட்டி, பள்ளபட்டி, அம்மையநாயக்கனூர், மதுரை அருகே, சோழவந்தான், வாடிப்பட்டி, சமயநல்லூர், பரவை, அழகர்கோயில், மேலூர், ஓத்தக்கடை, திருமங்கலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.
மதுரை நகரில் பெய்த மழையால், பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து, கழிவுநீருடன் கலந்து சாலையில் பெருக்கெடுத்தது. மதுரை கோமதிபுரம் காதர்மொய்தீன், வீரவாஞ்சி, ஜீப்பிலி டவுன் பகுதிகளில் கழிவு நீரும், மழைநீருடன் கலக்கிறதாம்.
No comments:
Post a Comment