விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (27). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2017ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து, சிறுமியின் பெற்றோர், திருவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், அன்பழகனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர், இது குறித்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெயஆனந்த், பாலியல் குற்றவாளி அன்பழகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
No comments:
Post a Comment