விருதுநகர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சிறு விடுப்பு போராட்டம்; பணிகள் பாதிப்பு. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 23 November 2022

விருதுநகர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சிறு விடுப்பு போராட்டம்; பணிகள் பாதிப்பு.


விருதுநகர் மாவட்டத்தில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

விருதுநகர் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களில் ஊரக வளர்ச்சித்துறையில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்கள் உட்பட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஊழியர்கள் மீது திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலங்கடந்த ஆய்வுப் பணிகளை உடனடியாக கைவிட வேண்டும். 


500க்கும் மேற்பட்ட, ஊரக வளர்ச்சிதுறை அலுவர்கள் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், பெரிய ஊராட்சிகளை பிரித்து, 25 ஊராட்சிகள் அடங்கியவற்றை ஊராட்சி ஒன்றியமாக மாற்றியமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் அனைவரும் இன்று சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடியது. ஊழியர்களின் சிறு விடுப்பு போராட்டத்தால் பணிகள் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad