திருவில்லிபுத்தூர் அருகே, தனியார் நிறுவனத்தில் 5 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்த, பெண் ஊழியர் மீது புகார். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 10 November 2022

திருவில்லிபுத்தூர் அருகே, தனியார் நிறுவனத்தில் 5 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்த, பெண் ஊழியர் மீது புகார்.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சதுரகிரி (50). இவர் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். நிறுவனத்தின் பணம் மற்றும் கணக்கு விவகாரங்களை சதுரகிரியின் உறவினரான நிவேதா (30) என்பவர் பார்த்து வருகிறார். நிவேதாவிடம் தொகை நிரப்பப்படாத காசோலைகளை, சதுரகிரி கொடுத்து வைத்திருந்தார். 

இந்த நிலையில் நிறுவனத்தின் கணக்குகளை சரிபார்த்த போது 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனது தெரிய வந்தது. இந்த பண மோசடியில் நிவேதா ஈடுபட்டது தெரிந்த சதுரகிரி, இது குறித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad