விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், கடந்த ஒருமணி நேரமாக தூறல்மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. மழை காரணமாக அணைக்கட்டுகள் மற்றும் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முழுவதும், மாவட்டத்தில் மழை இல்லாமல் இருந்தது. பகல் நேரத்தில் வெயில் வெளுத்து வாங்கியது. சிவகாசி பகுதிகளில் இன்று காலையும் வெயில் கடுமையாக இருந்த நிலையில், பிற்பகலில் திடீரென்று மேகங்கள் திரண்டு வந்தது. பலத்த காற்று வீசிய நிலையில் சற்று நேரத்தில் தூறல் மழை பெய்யத் துவங்கியது. சுமார் ஒரு மணி நேரமாக தொடர் தூறல் மழை பெய்து வருகிறது. மீண்டும் மழை பெய்யத் துவங்கியிருப்பதால், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:
Post a Comment