வேளாண் உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் 2022 - 2023-ம் ஆண்டில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் துணை இயக்கத் திட்டத்தின் கீழ் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை தனிப்பட்டவிவசாயிகள் மானியத்தில் பெற்று பயன்பெறும் வகையில் மொத்தம் 34 இயந்திரங்கள் கருவிகளுக்கு மொத்தம் ரூ.49.21லட்சம் முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதாவது,பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு 4 எண்கள் டிராக்டர்கள், 18 எண்கள் பவர்டில்லர்கள், 2 எண்கள் சுழற்கலப்பைகள், வைக்கோல்கட்டும் கருவி 1 எண், விதைவிதைக்கும் மற்றும் உரமிடும் கருவி-1 எண், களைஎடுக்கும் கருவி-1 எண், கொத்துக் கலப்பை - 1 எண்ஆக மொத்தம் 28எண்களுக்கு ரூ36.76லட்சம் ஒதுக்கீடும் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு 3எண்கள் டிராக்டர்கள், 2எண்கள்; பவர் டில்லர், 1 எண் கொத்துக் கலப்பை ஆக மொத்தம் 6 எண்களுக்கு ரூ.12.45லட்சம் ஒதுக்கீடும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், கிடைக்கப் பெற்றுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் சிறு, குறு,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதமானியம், இதரவிவசாயிகளுக்கு 40 சதவீதமானியம் அல்லுத அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மானியம் பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவுவைக்கப்படும். மேலும், பயனடைந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் சிறுமற்றும் குறு விவசாயிகளாக இருந்தால் அவர்களுக்கு கூடுதலாக 20 சதவிகிதமானியம் பின்னர் பெற்றுவழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன் பெறவிரும்பும் விவசாயிகள் விண்ணப்பத்துடன், நிலத்திற்கானபட்டா, அடங்கல், சிறு, குறுவிவசாயிசான்று, சாதிசான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படம், வங்கிபுத்தகநகல் ஆகியவற்றுடன் வேளாண்மைப் பொறியியல் துறை உபகோட்ட அலுவலகங்களில் நேரடியாக விண்ணப்பித் திட கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். அரசுவழிகாட்டுதல்படி, நடப்பு நிதியாண்டிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பரிசீலிக்கப்படவில்லை என்ற விபரமும் நேரடியாக உதவிசெயற் பொறியாளர் (வே.பொ.) அலுவலகங்களில் பதிவுசெய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, சிவகங்கை மற்றும் திருப்புவனம் வட்டார விவசாயிகள் சிவகங்கை தொண்டிரோட்டில் அமைந்துள்ள உதவிசெயற் பொறியாளர் (வே.பொ), சிவகங்கை அலுவலகத்திலும், தேவகோட்டை, சிங்கம்புணரி, கண்ணங்குடி, கல்லல், எஸ்.புதூர், சாக்கோட்டை மற்றும் திருப்பத்தூர் வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர்(வே.பொ), காரைக்குடி அலுவகத்திலும் விண்ணப்பித்திட வேண்டும்.
கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகளின் விண்ணப்பங்களுக்கு அரசுவழி காட்டுதலின்படி முன்னுரிமை வழங்கப்படும் என்ற விபரமும் தெரிவிக்கப்படுகிறது. மூதுரிமை அடிப்படையில் விவசாயிகளின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற விபரமும் தெரிவிக்கப்படுகிறது. விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பெற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விபரங்களுக்கு உதவிசெயற் பொறியாளர் (வே.பொ.) (பொ.), சிவகங்கை, தொலைபேசி எண். 8220253460-யிலும் மற்றும் உதவிசெயற் பொறியாளர் (வே.பொ.) (பொ.), காரைக்குடி, தொலைபேசிஎண். 9489440970யிலும் தொடர்பு கொள்ளக்கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment