இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 12 November 2022

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் கோவிலில், ஐப்பசி மாத மாதாந்திர வெள்ளியை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஸ்ரீமாரியம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாரியம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

மாதாந்திர வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து படையலிட்டும், மாவிளக்கு எடுத்தும், ஆயிரங்கண் பானை எடுத்தும், முடி காணிக்கை செலுத்தி நேர்த்திகடன் நிறைவேற்றினர். இதனையொட்டி விருதுநகர், சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கியது. வரும் வியாழன் கிழமை கார்த்திகை மாதம் பிறப்பதை முன்னிட்டு, திருச்செந்தூர், பழனி, சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கும் பாதயாத்திரை வருவார்கள். பக்தர்களின் வருகையை முன்னிட்டு கோவில் வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

No comments:

Post a Comment

Post Top Ad