விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், இன்று பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தகவல் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
பொதுமக்கள் தங்களது ரேசன் கார்டுகளில் பெயர் திருத்தம், புதிய பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், நகல் கார்டு, புதிய கார்டு உள்ளிட்டவை தொடர்பான அனைத்து தேவைகளுக்கும் மனு வழங்கலாம். குறைதீர் முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட வருவாய் அலுவலர் தகவல் வெளியிட்டுள்ளார்.

No comments:
Post a Comment