இராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் 150க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்பு. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 13 November 2022

இராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் 150க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்பு.


இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அய்யனார் கோவில் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் 150க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்பு.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. அய்யனார் கோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அய்யனார் கோவிலில் சாமி கும்பிட செல்வதற்கு வனத்துறை அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும்.


இந்த நிலையில், இராஜபாளையம் நகர் பகுதியில் காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த ஆகையல்  அய்யனார் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காகவும் ஆற்றில் நீரில் குளிப்பதற்காகவும் 150 க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். இதற்கிடையே, மதியம் மூன்று மணி அளவில் திடீரென காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு சென்றவர்களும் அக்கறையிலிருந்து இந்த பக்கம் வருவதற்கு முடியாமல் தவித்துள்ளனர்.


இந்த தகவல் அறிந்து, இராஜபாளையம் வட்டாட்சியர் சீனிவாசன் மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ப்ரீத்தி மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து மரங்களில் கயிறுகளைக் கட்டி 150 க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டனர். மேலும், ஒலிபெருக்கி மூலம் கோவில் பகுதியில்  யாராவது இருந்தால் தகவல் கொடுங்கள் பத்திரமாக மீட்கப்படும் என, அறிவித்தனர்.


காலையில் வனத்துறை சார்பில் குளிக்க அனுமதி இல்லை செல்லக்கூடாது என மறுப்பு தெரிவித்ததை  மீறி சென்றவர்கள் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad